நெல்லையில் ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியரை சரமாரியாக மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோட்டில் இருக்கும் ராஜா நகர் 3வது தெருவில் வாழ்ந்து வந்தவர் ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர் வெங்கடாஜலபதி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சைக்கிளில் சென்று வாங்கி விட்டு வீடு திரும்பிய பொழுது மெயின் ரோட்டில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெங்கடாஜலபதியை சரமாரியாக வெட்டினான்.
வெங்கடாசலபதி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் வெங்கடாஜலபதி மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகிறார்கள்.