சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிவகங்கை ரோட்டில் நீதிமன்றம் எதிரே செயல்பட்டு வரும் பேக்கரியில் கேக் வாங்குவதற்கு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது சிலர் கடைக்குள் அமர்ந்து சிகரெட் பிடித்துள்ளனர். அதனால் கடையில் இருந்த சதீஷ் என்பவர் கடைக்குள் சிகரெட் குடிக்க கூடாது என்றும் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத இளைஞர்கள் அங்கு அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதனை மீண்டும் சதீஷ் கண்டித்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அங்கிருந்த கேக் வெட்டும் கத்தியை கொண்டு மற்ற பொருள்களை கொண்டும் சதீஷை பலமாக தாக்கினர். அதில் சதீஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாக்கி அடித்து நொறுக்கிய இளைஞர்களை சிசிடிவி காட்சி மூலம் தேடி வருகின்றனர். அந்த சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகங்கையில் சிகரெட் பிடிக்க அனுமதி மறுத்ததால் பேக்கரி அடித்து நொறுக்கிய இளைஞர்கள்…#sivagangai pic.twitter.com/lRKNsGnEoO
— Karthick Sivansethupandian (@karthick000002) January 14, 2022