எதிர்பாராதவிதமாக கடைக்குள் கார் நுழைந்ததில் இருவர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்கா நாட்டில் டெம்பே என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று திடீரென கார் ஒன்று அங்கிருந்த கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கார் ஓட்டுனர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவை போலீசார் பதிவேற்றியுள்ளனர். இதில் கடையில் இரண்டு ஊழியர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென கார் சுவரை இடித்துக் கொண்டு கடைக்குள் நுழைந்ததுள்ளது. இந்த விபத்தில் அந்த இரண்டு ஊழியர்கள் மீதும் கார் மோதியது. இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இவர்களுடைய உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.