Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடைக்குள் புகுந்து…. “சரமாரியாக வெட்டிய கும்பல்”…. பலியான அண்ணன்… தப்பி ஓடிய தம்பி…. 10 பேர் அதிரடி கைது..!!

முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் சிவானந்த நகர் பகுதியை சேர்ந்தவர்கள் 27 வயதுடைய லோகேஷ். இவருடைய தம்பி 21 வயதுடைய வெங்கடேஷ். லோகேஷ் அம்பத்தூர் எஸ்டேட் கலைவாணர் நகரில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் லோகேஷ் கடையில் இருக்கும்போது அவரை பார்ப்பதற்காக அவருடைய தம்பி வெங்கடேஷ் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடைக்கு 10 பேர் சேர்ந்த கும்பல் ஒன்று வந்து அண்ணன், தம்பி இருவரையும் சரமாரியாக வெட்டினார்கள்.

அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். இதில் பலத்த காயமடைந்த லோகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். வேங்கடேஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், உயிர் தப்பிபதற்கு அங்கிருந்து ஓடினார். இதுகுறித்து அம்பத்தூர் எஸ்டேட் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் கடந்த வாரம் அதே பகுதியில் வசித்த 20 வயதுடைய லாசர் என்பவர் வெங்கடேஷ், லோகேஷிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்துள்ளார். அப்போது அண்ணன், தம்பி இரண்டு பேரும் சேர்ந்து லாசரை கைகளால் அடித்து விரட்டினார்கள். இதனால் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து லோகேஷை வெட்டிக் கொன்றது தெரிய வந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து லாசர், அவருடைய நண்பர்களான 19 வயதுடைய சண்முகம், 19 வயதுடைய நரேந்திரன், 22 வயதுடைய ராஜசேகர், 20 வயதுடைய சதீஷ், 19 வயதுடைய மணிகண்டன், 19 வயதுடைய சக்தி, 20 வயதுடைய விஷ்ணு மற்றும் இரண்டு சிறுவர்கள் ஆகிய 10 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |