Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியுள்ள செந்தமில் நகரில் அசோக் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மடிக்கணினி மற்றும் தங்க மோதிரம் ஆகியவை திருடி சென்றுள்ளனர்.

இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல அசோக் கடையை திறப்பதற்காக  வந்துள்ளார். அப்போது கடை உள்ள பொருள்கள் திருடு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அசோக் உடனடியாக கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |