Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பகுதியில் வைத்தியலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றார். இந்த கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு வைத்தியலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம், பால் பாக்கெட்டுகள், குளிர்பானம், சாக்லேட், சிகரெட் போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வைத்தியலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மளிகை கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |