Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற சிறுமி…. மோதிவிட்டு சென்ற பைக்…. போலீஸ் விசாரணை….!!

கடைக்கு சென்ற சிறுமியின் மீது பைக் மோதி நிற்காமல் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை கந்தளாய் பேராறு பகுதியில் 12 வயதுடைய சிறுமி கடைக்கு சென்று பொருள் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். அப்போது கந்தகளாய் பிரதான சாலையை கடக்கும்போது சிறுமியின் மீது வேகமாக வந்த பைக் மோதியது. சிறுமியின்  மீது மோதிவிட்டு  வேகமாக சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பைக் மோதியதில் சிறுமி பலத்த காயங்களுடன் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கந்தளாய் காவல்துறையினர் விசாரணையை  மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |