வாலிபரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை வடக்கு தெருவில் தீபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் தச்சநல்லூரை சேர்ந்த முருகன் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் தீபனை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து தீபன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகன் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.