தங்க நகையை திருடி சென்ற 2 பெண்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் பிரபல தங்க நகை கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல சென்றுள்ளனர். இந்நிலையில் கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி 2 1/2 பவுன் தங்க காப்பு ஒன்றை பெண்கள் திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். சிறிது நேரத்தில் தங்க நகை திருடு போனதை அறிந்த கடை ஊழியர்கள் மேலாளரான பாஸ்கர் என்பவரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடி சென்ற 2 பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.