Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கடைக்கு சென்ற பெண்” துண்டாக பறிபோன சங்கிலி…. தீவிர விசாரணையில் போலிஸ் ….!!

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் தாமஸ்-சோபியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சோபியா அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சோபியா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.

இந்நிலையில் சோபியா தனது சங்கிலியை மர்ம நபரிடமிருந்து பிடித்து இழுத்துள்ளார். அப்போது அந்த  வாலிபர்கள்  சோபியாவிடம்  இருந்து   ¾ பவுன் மதிப்பிலான பாதி  சங்கிலியை  அறுத்து கொண்டு  தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சோபியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |