Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் நடவடிக்கை..!!

வீட்டில் திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பகுதியில் வள்ளி என்பவர் வசித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளி வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்கு சென்ற சமயத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து வள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித், கோகுல் ஆகிய 2 பேரும் இணைந்து வள்ளியின் வீட்டில் திருடியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |