பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவைபுதூர் ஆல்பா நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரமிளா என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரமிளா வழக்கம்போல தனது ஸ்கூட்டரில் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பிரமிளா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.