சேலம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலத்திலிருக்கும் அளூர்பட்டி கிராமத்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு பிரியா என்ற மகள் உள்ளார். வடிவேல் தனது குடும்பத்துடன் திருவிழாவிற்கு புத்தாடை எடுக்க தாரமங்கலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு புத்தாடை எடுத்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கோலிக்காட்டானுர் பகுதியில் புதுத்துணியை தைப்பதற்காக டெய்லர் கடைக்கு எதிரில் மோட்டார் சைக்கிளை வடிவேல் நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சுமதி துணியை தைக்க கொடுப்பதற்க்காக சாலையை கடக்க முயன்ற போது ஜலகண்டாபுரத்திலிருந்து தாரமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சுமதி மீது மோதியது. இந்த விபத்தில் துக்கி வீசப்பட்ட சுமதி பலத்த காயமடைந்துள்ளார். இதனையடுத்து சுமதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வடிவேல் கொண்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சுமதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விபத்தை ஏற்படுத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.