Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தம் வேலைக்கு சென்ற பிறகு அவரது மனைவி கடைக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முருகானந்தத்தின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த முருகானந்தத்தின் மனைவி மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முருகானந்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |