மதுரையில் கடையிலிருந்து பணத்தை களவாங்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும், அவரது மகனும் அப்பகுதியிலிருக்கும் மீனாட்சி தியேட்டரின் அருகே நவதானிய கடையை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மதுரை மாவட்டம் ஆலங்குளத்தில் வசித்துவந்த மீனாட்சி என்ற பெண்மணி அவர்களது கடைக்கு நெல் விதையை வாங்க சென்றுள்ளார்.
இதையடுத்து மீனாட்சி கடையிலுள்ள கல்லாவில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட மகனும், தந்தையும் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மீனாட்சியை கைது செய்தனர்.