Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு வந்த வாலிபர்கள்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறி பகுதியை சண்முகம் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லதாவின் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சிகரெட் இருக்கிறதா என கேட்டுள்ளனர். இதனால் சிகரெட்டை எடுப்பதற்காக லதா திரும்பியபோது ஒரு வாலிபர் லதாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து லதா சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் இரண்டு வாலிபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து லதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய வாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |