சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்த போது, கடைசியாக எப்பொழுது அழுகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு சென்ற மாதம் இந்தியாவில் நடந்ததைப் பார்த்து அழுதேன் என்று தெரிவித்துள்ளார். அப்போது இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்தது. கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் சடலங்கள் கங்கை நதியில் மிதந்தது என்று அவர் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார். கொரோனா நிவாரண நிதியாக இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் 135 கோடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.