Categories
சினிமா தமிழ் சினிமா

கடைசியா நான் நினைச்சது நடந்திருச்சு… ‘பாரதிகண்ணம்மா’ வெண்பா மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் டி.ஆர்.பி- யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர் .

அதேபோல் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வெண்பா மீது ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இவரை எங்கு சந்தித்தாலும் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘கடைசியாக என்னையும் கடை திறப்பு விழாவிற்கு கூப்பிட்டாங்க ப்பா… நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்ணாலும் அதிக நல்ல எண்ணங்களை கொடுக்க முடியும்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |