Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

கடைசில இறங்கினாலும் களத்தில இவர் தான் ஹீரோ… அடிக்கிற ஒவ்வொரு அடியும் சாதனை தான்…!!

  • சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு நாள் உலக கோப்பை, டி20 உலகக் கோப்பை , சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் போன்ற அனைத்து வெற்றிகளையும் தனது கேப்டன்ஷிப்பில் தோணி பெற்றார் என்பது மிகச்சிறந்த சாதனையாகும்.
  • நியூசிலாந்து அணியின் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் போன்றோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் கேப்டனாக பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் அதிக எண்ணிக்கையில் கேப்டனாக போட்டிகளில் பங்கேற்ற பெருமை பெற்றவரே மகேந்திர சிங் தோனி
  • சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக சதங்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ளார். தோனி இதுவரை 9 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தோனி தனது ஸ்டெம்பிங் திறமையின் மூலம் இதுவரை 439 போட்டிகளில்  கலந்துகொண்டு 152   கிரிக்கெட் வீரர்களை  ஆட்டத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் 73 போட்டிகளில் கலந்துகொண்டு இதுவரை  1112  ரன்களை எடுத்துள்ளார். சர்வதேச  டி20 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் அதிக ரன்களை  குவித்தவர் தான் தோனி. 48 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தது இவரின் சிறந்த அதிக ஸ்கோராகும் .
  • சர்வதேச கிரிக்கெட்டில் 324 போட்டிகளில் கேப்டன் தோனி கலந்துகொண்டு 204 சிக்சர்களை குவித்து அதிக சிக்சர் குவித்த வீரர்களின் பட்டியலில் தோனி இடம்பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
  • தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 3 சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. உலக கோப்பை ஒருநாள் போட்டி 2011லும் சாம்பியன்ஷிப் கோப்பை கிரிக்கெட் போட்டி 2013லும் மற்றும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி 2017லும் வெற்றி பெற்றுள்ளது. 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் தோனி தலைமையிலான இந்திய அணி முதல் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.

Categories

Tech |