மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை தோற்கடிக்க விரும்புவதாக அதிபர் கூறியுள்ளார்.
ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே 135 நாளாவதாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் விட்டுக்கொடுக்காமல் ரஷ்யாவுடன் தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் பல ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் போன்றவற்றை வழங்கி உதவி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தலைவர்கள் கொண்டனர்.
இதில் அதிபர் புதின் பேசியதாவது. ரஷ்யாவை மேற்கத்திய நாடுகள் அனைத்தும் தோற்கடிக்க வேண்டும் என்று விரும்புகிறது. உக்ரைன் நாட்டில் கடைசி நபர் இருக்கும் வரை மேற்கத்திய நாடுகளை நம்முடன் போர் புரியுமாறு கேட்டுக் கொள்வோம். இந்த காலகட்டம் உக்ரைனிய மக்களுக்கு சோகமான காலகட்டம் என்றாலும், போர் நீடித்துக் கொண்டே தான் செல்லும் என்றார். மேலும் போர் தொடர்ந்து நீடித்து வந்தால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறைந்து விடும் என்றும் கூறினார்.