ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. முதலாவது மற்றும் 2வது ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றியடைந்து 2-0 எனும் கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. அப்போது டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அந்த வகையில் முதலாவதாக பேட்செய்த ஆஸ்திரேலியா 31 ஓவர் முடிவில் 141 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியது. அந்த அணியில் டேவிட்வார்னர் பொறுப்புணர்வுடன் ஆடி 94 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணியின் சார்பாக ரியான்பர்ல் 5 விக்கெட்டும், பிராட் இவான்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அதன்பின் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் ஜிம்பாப்வே அணியானது விளையாடியது. மருமானி மற்றும் கேப்டன் சகபாவா போன்றோர் நிதானமாக ஆடினர்.
இதில் மருமானி 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கிடையில் முனியாங்கோ 17 ரன்னில் அவுட்டானார். இறுதியில் ஜிம்பாப்வே அணியானது 39ஓவரில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் சகபாவா 37 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பாக ஹேஸ் லேவுட் 3 விக்கெட்டு வீழ்த்தினார். இதன் வாயிலாக ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் தொடரை 2-1 எனும் கணக்கில் கைப்பற்றியது.