2018-19ஆம் நிதியாண்டிர்க்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக 2018-19ம் நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் தேதி இரண்டு மாதம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, 2018-19ஆம் ஆண்டு வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் 2020ஆம் ஆண்டு ஜூலை 31ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருமுறை இந்த இறுதி தேதி நீட்டிக்கப்பட்டிருந்தது முன்பு,கடைசி தேதி மார்ச் 31ஆம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது. பின்னர், ஜூன் 30ல் இருந்து ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது. பேரிடர் காலத்தில் மக்கள் சந்திக்கும் இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.