இந்தியாவின் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மாணவர்கள் மத்திய மாநில அரசுகளின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சில நாடுகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாளாகும்.
கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று பிப்ரவரி 13-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் விண்ணப்பங்களை எவ்வித தவறுகளும் இன்றி பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.