கல்லூரியின் முன்பாக மாணவர்கள் தேங்காய், பூசணிக்காய் உடைத்து ஆரத்தி எடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காகுப்பத்தம் பகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இளநிலை வரலாறு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் கல்லூரி வாயிலின் முன்பாக செய்த செயல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது பிரசாந்த் என்ற மாணவன் தேர்வு எழுத செல்வதற்கு முன்பாக கல்லூரி வாயிலின் முன்பு தேங்காய் உடைத்து ஆரத்தி எடுத்துள்ளார். இதனையடுத்து தேர்வு முடிந்து அனைத்து மாணவர்களும் கல்லூரியை விட்டு வெளியே வந்தனர். அதன் பிறகு மாணவர் மீண்டும் தேங்காய், பூசணிக்காய் போன்றவற்றை உடைத்து ஆரத்தி எடுத்தார். மேலும் கல்லூரியை விட்டு செல்வதற்கு முன்பாக மாணவர்கள் கல்லூரிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆரத்தி எடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.