Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கடைசி நிமிடங்களில்…. 50 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படமீஞ்சி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்து 50 பயணிகளுடன் குமார் சிங்கம்புணரி வழியாக பொன்னமராவதிக்கு பேருந்து இயக்கி சென்றுள்ளார். இந்நிலையில் மேலைசிவபுரி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். சிறிது நேரத்தில் அவர் இருக்கையில் இருந்து கீழே விழுந்ததால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் புதுக்கோட்டை போக்குவரத்து பணிமனை பொது மேலாளர் குணசேகரன், பணியின் போது இறந்த குமாரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக 5 லட்சம் ரூபாயும், தொழிலாளர்கள் தரப்பில் 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |