Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி நேரத்தில் கைக்கொடுக்காத சுழற்பந்து…. டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி….!!!!

நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

கான்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தன்னுடைய முதல் இன்னிங்சில் 345 ரன்களும், நியூசிலாந்து அணி 296 ரன்களும் எடுத்தன. இதனை தொடர்ந்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 234 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இதனால் நியூசிலாந்து அணி 284 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய இறுதி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், தடுமாறிய நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தபோது, இறுதி நாள் ஆட்டம் முடிவுற்றது. இதனால் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

Categories

Tech |