Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செவரக்கோடு- மருதாக்கவிளை பகுதியில் வசிக்கும் 32 வயது வாலிபருக்கும், வெள்ளாங்கோடு பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த இரு விட்டாரும் நிச்சயம் செய்தனர். இவர்களது திருமணத்தை நேற்று தேமானூரில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். இந்நிலையில் திருமண விழாவிற்கு ஏராளமானார் வந்த நிலையில், மணப்பெண்ணின் வீட்டில் இருந்து யாரும் வராத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்த போது மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதால் திருமணத்தில் விருப்பமில்லை என பெண் வீட்டார் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது மணமகனுக்கு நோய் இருப்பதாக ஏற்கனவே தெரிவித்தும், திட்டமிட்டு அவமானப்படுத்திவிட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் மணப்பெண்ணை அழைத்து விசாரித்தனர். அப்போது மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது இன்று காலை தான் தெரியும். ஏற்கனவே தெரிந்திருந்தால் திருமணத்திற்கு சம்மதித்திருக்க மாட்டேன். நான் தாய் தந்தையை இழந்து உறவினர் பராமரிப்பில் வளர்ந்தேன். எனவே மணமகனை திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |