Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“கடையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய ட்ராக்டர்”…. விவசாயி பலி….!!!!!

கடையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் விவசாயி உயிரிழந்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே இருக்கும் காக்கநல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி தங்கபாண்டி என்பவர் மோட்டார் சைக்கிளில் பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ஆம்பூர் ரயில்வே கேட் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த ட்ராக்டரும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாரவிதமாக மோதிக்கொண்டதில் தங்கபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |