Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடையில் திடீர் தீ விபத்து…. ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!!

கடையில் தீ விபத்து ஏற்பட்டு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் உதிரி பாகங்கள் டயர் விற்பனை மற்றும் கார் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நான்கு ரோடு சந்திப்பிற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக இளையராஜா சென்றுவிட்டார். இந்நிலையில் காலை கடையில் இருந்து கரும் புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் உதிரி பாகங்கள், கணினிகள், பழுது நீக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ஜீப் உட்பட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |