Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடையில் நடைபெற்ற வியாபாரம்…. திடீரென புகுந்த நாகப்பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

மளிகை கடைக்குள் புகுந்த நாகப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக பிடித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் காந்திநகர் தங்க முனியப்பன் கோவில் முன்பு ஜெயகுமார் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை அமைந்துள்ளது. இந்த கடையில் நேற்று மாலை வழக்கம் போல ஜெயக்குமார் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பாம்பு ஒன்று கடைக்குள் புகுந்ததால் ஜெயகுமார் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணிநேர போராட்டத்திற்கு பிறகு கடைக்குள் பதுங்கியிருந்த 5 அடி நீள நாக பாம்பை உயிருடன் பிடித்துவிட்டனர். அதன் பிறகு பிடிப்பட்ட நாகப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.

Categories

Tech |