கடையில் குட்காவை பதுக்கி வைத்த குற்றத்திற்காக அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரையூர் காந்தி தெருவில் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல்லா என்ற தம்பி இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து காரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு எதிரே பெட்டி கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அண்ணன்-தம்பி இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரம் நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் பெட்டிக் கடை மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் அண்ணன்-தம்பி இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 157 குட்காவை பறிமுதல் செய்துள்ளனர்.