மளிகை கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கனூர் பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மதனின் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் மதனின் கடையில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது கடையில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.