மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கி பொருட்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பேன்சி கடை அமைந்துள்ளது. இங்கு கோபாலகிருஷ்ணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கடைக்குள் நுழைந்து கோபாலகிருஷ்ணனை தாக்கி கடையை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதனால் காயமடைந்த கோபாலகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பாலமுருகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.