ஈரோடு மாவட்டத்தில் கடையின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த மொபட்டை திருடிச் சென்ற வாலிபரை கையும் களவுமாக பிடிப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் ஈ.பி.பி நகர் ,தென்னந்தோப்பு தெருவை சேர்ந்தவர் 30 வயதான தியாகு என்பவர்.இவர் ஈரோடு, மேட்டூர் ரோட்டிலுள்ள ஒரு கடையின் வாசலில் அவருடைய மொபட்டை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார் .
அப்போது அவர் திரும்பி வந்து பார்க்கும் பொழுது நிறுத்தி வைத்திருந்த இடத்தில் மொபட்டை காணவில்லை .இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார் .உடனே தியாகு தனது நண்பரின் உதவியோடு அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளார் .
ஆனால் மொபட் கிடைக்கவில்லை இது தொடர்ந்து தியாகு அப்பகுதியில் உள்ள எல்லை மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த பொழுது அப்பகுதியில் வாலிபர் ஒருவர் அவரது மொபட்டை கொண்டு சென்றுள்ளார் .உடனே அங்கிருந்தவர்களின் உதவியுடன் தியாகு அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் .
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்துள்ளார் .அந்த விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டத்தின் அருகிலுள்ள ராசிபுரம் அடுத்த வடுகம் பகுதியை சேர்ந்த சந்திரகுமார் (வயது34 )என்பதும் தெரியவந்துள்ளது .அவர்தான் மொபட்டை திருடியதும்விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரகுமாரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.