ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. காலை முதலே மதுபிரியர்கள் டாஸ்மாக் முன்பு வரிசைகட்டி நின்று அதிகளவில் மதுவை வாங்கி சென்றனர். ஒரு சிலர் பல நாட்கள் கழித்து மதுவை பார்த்த சந்தோசத்தில் அதற்கு முத்தமிட்டு குடித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.165 கோடிக்கு மது விற்பனையானது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ. 127.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.37.28 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ.33.41 கோடி, சேலம் மண்டலத்தில்ரூ.28.76 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.27.64 கோடிக்கு என மொத்தம் ரூ.127.09 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.