2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கரையாங்காடு கிராமத்தில் விவசாயியான பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளில் கடை தெருவுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக தொண்டியங்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பொன்னுசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.