மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு அரசு கடை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்ப்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் கடை மற்றும் தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் படி பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பான சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
எனவே நமது மாவட்டத்தில் உள்ள கடை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் அமர்ந்து பணி செய்யும் வகையில் இருக்கை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும், இதை மீறி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கடை நிறுவன சட்டத்தின் கீழ் வேலை அமைப்பு பதிவேடு, சம்பள பதிவேடு விவரங்கள் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அதையும் பின்பற்ற வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.