விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாவதைத் தொடர்ந்து கட்அவுட் அமைப்பதற்கான பணியை விஜய் ரசிகர்கள் தொடங்கியுள்ளன.
விஜய் நடிப்பில் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளிவந்த இரண்டு பாடல்களும் மாபெரும் ஹிட்டடித்தது.
இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் இதனை கொண்டதுடன் வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அதனால் கட்அவுட் அமைப்பது, தோரணங்கள் கட்டுவது போன்ற பல பணிகளை தற்போது இருந்து விஜய் ரசிகர்கள் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் முதல் நாள் 1000 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிறப்பு காட்சிக்கு அனுமதி பெற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.