கட்சிகள் இஷ்டம்போல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது நீங்கள் வேற்று கிரகத்தில் இருந்தீர்களா என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடியுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம். கட்சிகள் இஷ்டம் போல் பிரச்சாரம் செய்தபோது வேற்றுகிரகத்தில் இருந்தீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மே 2ம் தேதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும். இல்லை எனில் வாக்கு எண்ணிக்கை தடை விதிக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.