மாநிலங்களவையில் விரைவில் காலியாகும் 57 எம்பிக்களின் இடங்களுக்கு வரும் ஜூன் பத்தாம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி கொள்வதற்கு 45 எம்எல்ஏக்களின் ஓட்டுகள் தேவையாகும். இதனைத் தொடர்ந்து இந்த தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இம்ரான் பிரதாப் கார்த்தி மராட்டிய மாநிலத்தில் இருந்து போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. மராட்டிய காங்கிரசார் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பிரிவான மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நடிகையுமான நக்மாவும் அதிருப்தி தெரிவித்துள்ளர். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 2003- 2004 ஆம் வருடத்தில் நான் காங்கிரஸில் இணைந்த போது ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்குவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோனியா காந்தி உறுதி அளித்தார்.
நாம் அப்போது ஆட்சியில் இல்லை. அப்போதிலிருந்து 18 வருடங்கள் ஆகியும் மாநில தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் இப்போது மராட்டியத்தில் இருந்து ராஜ்யசபாவில் போட்டியிட இம்ரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்புக்கு நான் தகுதி இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.