Categories
மாநில செய்திகள்

கட்சியை சரி செய்ய வேண்டும்…. சசிகலா சூளுரை…..!!!!

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் எந்த தொண்டர் பேசினாலும் கட்சியை சரி செய்ய வேண்டும் என்றுதான் கூறுகின்றனர் என்று சசிகலா தெரிவித்துள்ளார். கட்சிக்காரர் என்று ஒருவரை உட்கார வைத்துவிட்டு செல்கிறோம். அவர் மனது மாறினால் என்ன செய்வது? நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நாம், இவர்கள் (ஓபிஎஸ்-ஈபிஎஸ்) செயலால் தற்போது அந்த அங்கீகாரத்தை இழந்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |