காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்தால் கட்சிக்கு எந்த பலனும் இல்லை என கார்த்திக் சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
இன்றைய தினம் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் அது குறித்த விமர்சனத்தை கார்த்தி சிதம்பரம் முன்வைத்துள்ளார். தேர்தல் வருவதையொட்டி தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தன்னை பலப்படுத்திக்கொள்ள புதிய நிர்வாகிகள் நியமன பட்டியலை வெளியிட்டு இருந்தார்கள். இது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பரிந்துரையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு அது காங்கிரஸ் தலைமை ஏற்றுக் கொள்ளப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு.
அதன்பிறகு கார்த்திக் சிதம்பரம் மிக முக்கிய குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளார். 32 துணைத்தலைவர்கள் 57 பொதுச்செயலாளர்கள் 104 செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய பெரிய கமிட்டியால் எந்தப் பயனும் இருக்காது என்பதை கார்த்திக் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதிகாரம் யாருக்கும் இல்லாததால் அவர்களுக்கு பொறுப்பும் இருக்காது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.