தேமுதிக தலைவர் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.
தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தன்னுடைய மனைவி பிரேமலதா உடன் இன்று தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்றுவதற்காக வந்தார்.
இதனையடுத்து 118 அடி உயர கொடிக்கம்பத்தில் உட்கார்ந்திருந்த படி விஜயகாந்த், பிரேமலதாவின் உதவியுடன் தேசிய கொடியை ஏற்றினார். அதன்பிறகு தொண்டர்களை பார்த்து கையசைத்தார். இதைப்பார்த்த தொண்டர்கள் கண்ணீர் மல்க விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என தொண்டர்கள் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளனர்.