Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்சி பிரமுகரை பார்க்க சென்ற நண்பர்கள்…. நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. விருதுநகரில் பரபரப்பு…!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதிஷ்டவசமாக 3 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெயராஜ்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் ஜெயராஜ் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் நண்பர்களான மதுரைவீரன், எட்வின் நோவா ஆகியோருடன் கட்சி பிரமுகர் ஒருவரை சந்திப்பதற்காக காரில் சென்றுள்ளார். இவர்கள் கட்சி பிரமுகரை பார்த்துவிட்டு அரசு மருத்துவமனை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயராஜும், அவரது நண்பர்களும் உடனடியாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |