Categories
தேசிய செய்திகள்

கட்டணம் உயர்வு:ஆட்டோ டாக்ஸியில் செல்பவர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் ஏழை எளிய மக்கள் குடும்பம் நடத்துவதே கடினமாகிவிட்டது. சமையல் சிலிண்டர் விலை உயர்வு, தக்காளி விலை டெல்லி சந்தையில் அதிகரித்து உள்ளது. தலைநகர் டெல்லியில் புதன்கிழமை தக்காளி விலை ரூ.80 க்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலையும் உயருகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் டாக்ஸி, ஆட்டோ கட்டணம் உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இது டெல்லி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கட்டணம் திருத்த குழு டெல்லி அரசிடம் கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை அரசு ஏற்று கொண்டால் டெல்லியில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணம் உயரும்.

அதனைத் தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணத்தை மாற்றியமைக்க டெல்லி அரசு கடந்த மாதம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. இந்த குழு தனது அறிக்கையை டெல்லி அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கட்டணத்தை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் அமைச்சரவையில் விவாதித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். இதனை தொடர்ந்து கட்டணம் குறித்த குழு பரிந்துரையில் கட்டணத்தை உயர்த்த பரிந்துரைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழு 3 சக்கர வாகனங்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.1 உயர்த்தவும், டாக்ஸி களுக்கு 60% உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |