Categories
தேசிய செய்திகள்

கட்டணம் உயர்வு: சபரிமலை பக்தர்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல்… வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

கேரளா மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருவது வழக்கம் ஆகும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவிலுள்ள எந்த வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை. இப்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்து இருப்பதால் மீண்டும் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

சென்ற 2 வருடங்களுக்கு பின் ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டு இருப்பதால் மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு பக்தர்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஐயப்பன் கோவிலில் பூஜைக்கட்டணம் முதல் அரவணை பாயசம், நெய் உள்ளிட்ட பிரசாதங்கள் வரையிலும் அனைத்தின் விலையையும் உயர்த்தப்போவதாக கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த விலை உயர்வு வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்து இருக்கிறது.

அந்த வகையில் படி பூஜை கட்டணம் ரூபாய் 1,15,000-ல் இருந்து ரூபாய் 1,37,900 ஆகவும், சகஸ்ரகலசம் கட்டணம் ரூபாய் 80,000-ல் இருந்து ரூபாய் 91,250 ஆகவும், உதயாஸ்தமன பூஜை கட்டணம் ரூபாய் 50,000ல் இருந்து ரூபாய் 61,800 ஆகவும், உற்சவபலி கட்டணம் ரூபாய் 30,000-ல் இருந்து ரூபாய்37,500 ஆகவும், களபாபிஷேகம் கட்டணம் ரூபாய் 22,500-ல் இருந்து ரூ.38,400 ஆகவும், தங்க அங்கி சார்த்துதல் கட்டணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.15,000 ஆகவும், புஷ்பாபிஷேகம் கட்டணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.12,500 ஆகவும், சதகலசம் கட்டணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.12,500 ஆகவும், அஷ்டாபிஷேகம் கட்டணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 ஆகவும், உச்ச பூஜை கட்டணம் ரூ.2,500-ல் இருந்து ரூ.3,000 ஆகவும், பகவதி சேவை கட்டணம் ரூ.2,000-ல் இருந்து ரூ.2,500 ஆகவும், உஷ பூஜை கட்டணம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும், கணபதி ஹோமம் கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ. 375 ஆகவும், கெட்டு நிறைத்தல் கட்டணம் ரூ.250ல் இருந்து ரூ.300-ஆகவும், அபிஷேக நெய்(100 மி.லி) கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100 ஆகவும், நீராஞ்சனம் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆகவும், அரவணை கட்டணம் ரூ.80 லிருந்து ரூ.100 ஆகவும், அப்பம் (ஒரு பாக்கெட்) ரூ.35-ல் இருந்து ரூ.45 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது

Categories

Tech |