ரயில்வே நடைமேடை கட்டணம் கும்பகோணம், விருதாச்சலம் ஆகிய ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் தொற்று குறைந்ததன் காரணமாக போக்குவரத்து, ரயில் சேவை போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகள் தவிர அவர்களுடன் அதிகம் பேர் ரயில் நிலையங்களுக்கு வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்படும்.
இதனால் இவற்றை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே நடைமேடை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி கும்பகோணம், விருதாச்சலம் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூபாய் 10இல் இருந்து ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் பயணிகளுடன் அதிகமானோர் வருவதை தடுப்பதற்காக நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.