Categories
தேசிய செய்திகள்

கட்டணம் கிடையாது!… பாரம்பரிய நினைவிடங்களுக்கு திரண்டு வந்த சுற்றுலாப் பயணிகள்….!!!!

3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும், கட்டணம் இன்றி அனுமதிக்கப்படுவதாலும் நாடு முழுவதும் இருக்கும் பாரம்பரிய நினைவிடங்களில் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் குவிந்துள்ளனர். இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியமிக்க நினைவிடங்களில் ஆகஸ்ட் 5 -15-ஆம் தேதி வரை பொதுமக்கள் கட்டணம் இன்றி அனுமதிக்கப்படுவா் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இந்தியாவின் 75-வது சுதந்திரதின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டு இருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 75-வது சுதந்திரதின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களில் ஆகஸ்ட் 5 -15-ஆம் தேதி வரை பாா்வையாளா்கள் கட்டணம் இன்றி அனுமதிக்கப்படுவா் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புது தில்லியில் வழக்கமாக அதிகம் கவரும் தாஜ்மகால் உள்ளிட்ட நினைவுச்சின்னம், பாரம்பரிய நினைவிடங்களில் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

Categories

Tech |