Categories
தேசிய செய்திகள்

கட்டண உயர்வு….. மக்களே தயாராகுங்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியா முழுவதும் உபர், ஓலா ஆகிய வாகன சேவைகள் இயங்கிவருகின்றது. இதில் ஆட்டோ மற்றும் கார் வாடிக்கையாளர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆட்டோ ஓட்டுநர் உடன் எந்த பேரமும் பேசாமல் செயலிகள் மூலமாகவே பயணத்திற்கான தொகை கணக்கீடு செய்யப்படுகின்றது. அத்துடன் இது எளிதான முறையில் இருப்பதால் மக்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஆட்டோவில் பயணம் செய்வது அல்லது ஆப்களின் மூலம் புக் செய்து பயணம் செய்வது ஆகிய இரண்டு ஆட்டோ சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்து இருந்தது.

இந்நிலையில் ஓலா, ஊபர் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் ஆட்டோ சேவைகளுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து இனி 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது ஜனவரி 2022- 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக 2022 ஜனவரி முதல் ஓலா, உபர் உள்ளிட்ட செயலியின் மூலம் முன்பதிவு செய்யும் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸியில் சவாரி கட்டணம் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசின் புதிய வரிவிதிப்பு நடைமுறை தான் காரணம் என்று கூறப்படுகின்றது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இழப்புதான் என ஊபர் நிறுவனங்களின் தலைவர் கூறியுள்ளார்.  இதனால் பயணிகளும் பாதிக்கப்படுவார்கள் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |