ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கிரெடிட் கார்டு மூலமாக பணம் எடுப்பதற்கான கட்டணம் 2.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணமாக 500 ரூபாய் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதேபோன்று auto-debt- return கட்டணமும் 2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கும் குறைந்தபட்ச கட்டணம் 500 ரூபாய் ஆகும். மேலும் தாமதம் கட்டணங்களுக்கும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது எஸ்பிஐ வங்கி. இருப்பினும் 100 ரூபாய்க்கு உட்பட்ட கட்டணத்துக்கு எவ்வித தாமதம் கட்டணமும் கிடையாது..
தாமதக் கட்டணம்:
101 – 500 ரூபாய் – ரூ.100
501 – 5000 ரூபாய் – ரூ.500
5001 – 10,000 ரூபாய் – ரூ.750
10,001 – 25000 ரூபாய் – ரூ.900
25001 – 50000 ரூபாய் – ரூ.1000
50000 ரூபாய்க்கு மேல் – ரூ.1200
இந்தக் கட்டணங்களுடன் ஜி.எஸ்.டி.யும் சேர்த்து வசூலிக்கப்படும்.